அனுஷ்கா நடிப்பில் உருவான திரில்லர் படமான “பாகமதி” திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின்றது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை பற்றி பேசினார்.
இதன்போது, “எல்லா துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளது, பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும்” என்று கூறினார்.
‘பாகுபலி 2′ படத்தில் நடித்திருந்த அனுஷ்கா, ஒரு காட்சியில் “என்னைத் தொடுபவரின் கையை வாளால் வெட்டுவேன்” என்று குறிப்பிடிருந்தார். அதுபோன்று நிஜவாழ்க்கையில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களின் கையை வெட்ட வேண்டும்” என அனுஷ்கா பேசியுள்ளார்.