பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணிதம் தேர்வு நடந்தது. மேலும் விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
முக்கிய தேர்வாக கருதப்படும் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய பல மாணவ-மாணவிகள் கவலை தெரிவித்தனர்.
இதற்கு முன்பு அந்த கேள்விகளை நாங்கள் பார்த்ததுகூட இல்லை. பாடப்புத்தகத்தின் பின்னால் இடம்பெறும் கேள்விகளை தாண்டி புதிதாக கேள்விகள் உருவாக்கப்பட்டு கேட்டிருப்பது போன்று தெரிகிறது.
புளு பிரிண்ட் முறையில் இல்லாமல் புதிய முறை வினாத்தாள் என்பதால் சிபிஎஸ்இ தரத்துக்கு இணையாக கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய வினாக்கள் வரவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கணித தேர்வை சரியக எழுதவில்லை என சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.