Monday, May 29, 2023
spot_img

12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் கைது செய்து தண்டிக்க வேண்டும்


சர்வதேச விசாரணை அவசியம் என்றால்12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை மீண்டும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என மேல்மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகள் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் பொய்யான கருத்­துக்கள்.

இவர் கூறும் கருத்துக்கள் உண்மை என்றால் அதற்கான பொறுப்பையும் அவரே ஏற்றுக்­கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் நாம் எச்சரித்த போதும் 12 ஆயிரம் விடுதலைப் புலிகளை விடுதலை செய்து தனது அரசியல் இருப்பை தக்கவைக்க மஹிந்த முயற்சி செய்தார். அதில் மிகவும் முக்கியமான குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், யுத்தம் முடிந்த பின்னர் உள்ளக விசாரணைகள் ஏதேனும் ஒன்றை முன்னெடுத்திருந்தால் இன்று நாம் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

ஆனால் அதை தவிர்த்து சுயநல அரசியல் செய்ய முன்வந்தமையே இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணமாகும்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்க முடியும். ஆனால் எந்த நகர்வு எடுத்­தாலும் அது இலங்கையின் நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

குறிப்பாக, எமது சட்டத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் அமைவாகவே அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட்ட விசாரணைக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. அதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

அத்துடன் சர்வதேச விசாரணை வேண்டும் என தமிழ் அரசியல் தரப்பின்னர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் முதலில் கடந்த காலத்தில் விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்.

இதற்கு தமிழர் கட்சிகளும் உறுப்பினர்களும் தயார் என்றால் நாமும் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என மேல்மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Related Articles

Stay Connected

0FansLike
3,788FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles