Monday, May 29, 2023
spot_img

பிரித்தானியாவில் செவிலியராக பணிபுரிந்த பெண்ணின் உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது

பிரித்தானிய நகரமொன்றில் வாழும் ஒர் இளம்பெண், ஊரடங்கின்போது குடும்பத்துடன் இணைந்துகொள்வதற்காக பணியிலிருந்து வீடு திரும்பிய நிலையில், திடீரென ஒரு நாள் அவரது உடல் மஞ்சள் நிறமாக மாறி இறுதியில் உயிரிழந்த சோகம் குடும்பத்தவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் Doncasterஐச் சேர்ந்த Dani Housley (26), செவிலியராக பணி செய்பவர். மருத்துவமனையில் பணிபுரியும் தான் வீட்டுக்கு வந்து வந்து சென்றால், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கையான Jamie-Leeக்கு ஒருவேளை ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் என்பதற்காக தனியாக வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், பணி முடித்து, ஊரடங்கின்போது குடும்பத்துடன் இணைந்துகொள்ளலாம் என்பதற்காக தாய் வீட்டுக்கு வந்துள்ளார் Dani. ஜூன் மாதம் 22ஆம் திகதி திடீரென Daniயின் உடல் மஞ்சள் நிறமாக மாற, அவரது தங்கை, அக்கா உங்கள் உடலின் நிறம் வேடிக்கையாக இருக்கிறது என்று கிண்டல் செய்துள்ளாள் நிலைமை புரியாமல்.

இதை கவனித்த Daniயின் தாய் Sharon, மகளுக்கு ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்து உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் Daniயின் உடல் நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றிருக்கிறார். இரத்தம் ஏற்றப்பட்ட பிறகும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Dani.

ஆனால், சிகிச்சை எந்த பலனும் அளிக்காமல் நிமோனியாவும் தாக்கி, அவரது உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து, கடைசியில் கோமாவிலிருந்து விடுபடாமலே இவ்வுலகத்தை விட்டு சென்றுவிட்டார் Dani.

அவரது உடல் எதனால் மஞ்சளானது, எதனால் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டார் என்பது போன்ற விடயங்கள் வெளியிடப்படவில்லை. Daniயும், Daniயின் யின் தாய் Sharon, Daniயின் தங்கை Jamie-Leeயும் எப்போதும் மூன்று பேராக சுற்றித்திரிவதுண்டு. இப்போது Daniயை இழந்து தவிக்கிறது குடும்பம்.

Related Articles

Stay Connected

0FansLike
3,787FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles