Monday, May 29, 2023
spot_img

யாழில் கடையிலுள்ள பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு சென்ற வன்முறை கும்பல்

யாழ். மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலுள்ள பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த வழியால் சென்ற இராணுவத்தினர் குறித்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்ததுள்ளனர்.

அத்துடன், கும்பல் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் அவ்விடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய் சந்திக்கு அண்மையாக, பொன்னாலை வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஏனையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர்.

 

Related Articles

Stay Connected

0FansLike
3,787FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles