Monday, May 29, 2023
spot_img

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம்

மேஷராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். அம்பிகை யை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்

ரிஷபராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களின் மூலம் முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி முடிவுக்கு வரும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுனம்

மிதுனராசி அன்பர்களே!

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விநாய கரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடகம்

கடகராசி அன்பர்களே!

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு வீட்டி லேயே குடும்பத்தினருடன் தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. பிள்ளைகளின் உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல் படுவது அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். சிவபெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும் வாய்ப்பு ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம்

துலாராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது அவசியம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படும். இன்று நீங்கள் துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

தனுசு

தனுசுராசி அன்பர்களே!

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகரம்

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலுடன், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் பணி யாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்னை களில் இருந்து விடுபட முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.

கும்பம்

கும்பராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.

மீனம்

மீனராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்மாமன் வழியில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத் தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் காரியத்தடைகள் விலகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

Related Articles

Stay Connected

0FansLike
3,787FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles