Monday, May 29, 2023
spot_img

இன்றைய ராசிபலன்-25.06.2021

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரால் மனக்கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

ரிஷபராசி அன்பர்களே
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனராசி அன்பர்களே
மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேற நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகராசி அன்பர்களே
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு விரியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமை வார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

சிம்மராசி அன்பர்களே
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னிராசி அன்பர்களே
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக் கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாராசி அன்பர்களே
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

தனுராசி அன்பர்களே
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரி பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

மகரராசி அன்பர்களே
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளியூர் பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கும்பராசி அன்பர்களே
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சியின் முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனராசி அன்பர்களே
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,787FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles