Monday, May 29, 2023
spot_img

யாழ்.பல்கலைகழக கணனி விஞ்ஞானதுறை விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு..!

யாழ்.பல்கலைகழக கணனி விஞ்சானத்துறை விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்கின்றனர்.

கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன்,

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரை பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று சனிக்கிழமை (நவ 26) துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இப்பேரவைக் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலாநிதி ஏ. ரமணன்,

கலாநிதி எம். சியாமளன் ஆகியோரின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள்,

நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அடிப்படையிலேயே இந்த இரு பேராசிரியர்களும் கணினி விஞ்ஞானத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறை தாபிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில்,

Related Articles

Stay Connected

0FansLike
3,787FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles