யாழ்.மாவட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான நிலையம் ஒன்றனை அமைக்க சுமார் 10 ஏக்கர் காணி வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பொருள் தடுப்புத் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரினதும் வேண்டுகோள்.
அதன் பிரகாரம் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான சுமார் 10 ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பரிந்துரைத்துள்ளோம்.
மேலும் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான செயத்திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்