Monday, May 29, 2023
spot_img
Home Blog

யாழ்.பலாலி வீதியில் மூடப்பட்ட மருந்தகம் மீள திறப்பு! வடக்கு சுகாதாரத்துறையின் குத்துவெட்டு அம்பலமானதாக தகவல்..

யாழ்.பலாலி வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மருந்தகம் ஒன்று திடீரென மூடப்பட்ட நிலையில் அதே மருந்தகம் மீளவும் கோலாகலமாக திறக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பாக பல உள்வீட்டு தகவல்கள் கசிந்திருக்கின்றன.

குறித்த மருந்தகம் சுகாதார துறை அதிகாரிகளால் மருந்தகங்களுக்குரிய நியமங்களை கொண்டிருக்கவில்லை. என குற்றஞ்சாட்டப்பட்டு மூடப்பட்டது. எனினும் அந்த மருந்தகம் உரிய நியமங்களை பூர்த்தி செய்திருந்தபோதும்,

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் பிறிதொரு மருந்தகம் மீது வைத்திருந்த அளவுக்கதிகமான பற்றினால் குறித்த மருந்தகத்தை மூடுமாறு பணித்ததாக கூறப்படுகின்றது.

(NMRA)தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மட்டுமே ஒரு மருந்தகத்தை திறப்பதற்கும், மூடுவதற்குமான கட்டளைகளை பிறப்பிக்கும் ஒரு நிறுவனமாக சுகாதார அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

குறித்த அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் மேற்படி மருந்தகத்தின் அனுமதி தொடர்பான அளவீடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட நிலையில் இரு அதிகாரிகளும் வெவ்வேறான அளவீடுகளில் அறிக்கை சமர்ப்பித்ததாக அறியக் கிடைத்தது.

இவ்வாறு செயல்பட்ட அதிகாரிகள் ஒருவர் குறித்த மருந்தகம் திறக்கப்படகூடாது என்பதில் மிக திடமாக இருந்தமையும் அம்பலமாகியுள்ளது.  புதிதாக திறக்கப்பட்ட மருந்தகம் ஒன்றுக்கும் அதன் அருகில் உள்ள மருந்தகத்திற்கும் இடைப்பட்ட துாரத்தை குறைத்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த மருந்தகத்தை மூடுமாறு பணித்த அதிகாரி தொடர்பில் சுகாதார அமைச்சுவரை தகவல்கள் சென்றுள்ள நிலையில் மருந்தகத்தை மூடுமாறு பணித்த வடமாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருவரை ஒருவர் விரல் சுட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் “லயன் எயர்” விமானசேவை 12ம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தொிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை,

சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்.

ஆலோசனைகளை முன்வைக்கலாம்.யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அ

னைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

யாழ்.தாவடியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாள்வெட்டு மோதல்! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.தாவடி மதுபான நிலையத்தின் அருகில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் வாள்கெட்டுக்கு இலக்காகி இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகினர்.

இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் வீதியில் போகும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுக்கும் போதை பொருள் பாவிக்கும் இளைஞர்கள்! : அச்சத்தில் மக்கள்!

யாழில் போதைப்பொருள் பாவித்துவிட்டு வீதியில் வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் பொதுமக்களிடம் அத்துமீறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் வாழ்கின்றதாக தெரிவித்துளளனர்.

இந்த சம்பவமானது யாழ்.சங்கானை நகரினை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பாடசாலை மற்றம் கல்வி நிலையங்களுக்கு சென்று வரும் மாணவிகளை அவ் இளைஞர்கள் பாலியல் சீண்டல்கள் மற்றும் தகாத வார்த்தைகளில் பேசி வருவதால் அம்மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு தொல்லை கொடுப்பவர்கள் 18 மற்றும் 19 வயதினையுடைய சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.